Tuesday, 27 August 2013

தனுஷ் , சிம்பு இணைந்து நடிக்கும் புதிய படம்

  simbu,dhanush,kakka muttai,vettrimaran,tamil,tamilflim,new,movie
நடிகர் தனுஷ் உண்டர்பார் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து ‘காக்கா முட்டை’ என்ற படத்தை தயாரித்து வருகின்றனர்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தை ஒளிப்பதிவாளர் மணிகண்டன் இயக்குகிறார் .
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சேரியில் வாழும் குழந்தைகளின் வாழும் இடம் மற்றும் அவர்களது வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாராகி வருகிறதாம்.

இந்நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறாராம்.

அவரே முன்வந்து இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கவிருப்பது இவர்களது நட்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக உள்ளது என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறதாம்.

0 comments:

Post a Comment