Tuesday, 27 August 2013

அஜித்துக்கு கிடைத்த பாராட்டு மழை

ஹாலிவுட்டில் அனைத்து சண்டைக் கலைஞர்களும் ஒருமித்த குரலில் பாராட்டுவது நடிகர் டாம் க்ரூஸை. சமீபத்தில் அவரது Oblivion வெளியான போது வளைத்து வளைத்து பாராட்டினார்கள்.


அனைத்துவிதமான சண்டைக் கலையிலும் தேர்ச்சி பெற்றவர் டாம் க்ரூஸ். அவருக்கு எப்படி பைட் பண்ணுவது என்பது தெரியும்.

முக்கியமாக சண்டைக் காட்சியின் போது எப்படி அடிபடாமல் தற்காத்துக் கொள்வது என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்.

அவரை வைத்து சண்டைக் காட்சி அமைப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினர்.

டாம் க்ரூஸுடன் சண்டைக் காட்சியில் பணியாற்றியவராம் லீ விட்டேகர். இவர்தான் ஆரம்பம் படத்தின் சண்டைக் காட்சிகள் சிலவற்றை வடிவமைத்திருக்கிறார்.

அஜித்தின் சண்டையிடும் திறமையைப் பார்த்தவர், அஜித்தைப் பார்க்கும் போது டாம் க்ரூஸின் நினைவு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் அஜித் எப்படி சண்டை போட்டிருக்கிறார் என்று பார்க்கலாம்.

0 comments:

Post a Comment