Monday, 12 August 2013

தலைவா பட பிரச்னைக்கு எதிராக நான் கருத்து கூறவில்லை : தனுஷ்

இளையதளபதி விஜய் நடித்த தலைவா படம் ஒருசில காரணங்களால் தமிழகத்தில் வெளியிடப்படவில்லை என்பதை குறித்து நடிகர்கள் சிம்பு, பிரகாஷ்ராஜ் உட்பட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


கடந்த இரு தினங்களுக்கு முன் தனுஷ் தனது டுவிட்டர் பக்கஇ இணையத்தில் , தலைவா படத்திற்கு நிகழ்ந்த பிரச்சனை நியாயமற்றது.

"ஒரு படத்திற்கு தடை விதிப்பதில் காட்டும் முயற்சியை நாட்டின் வளர்ச்சிக்கு காட்டினால் நாடு நன்றாக இருக்கும்"
என்று குறிப்பிட்டிருந்தார்.

தனுஷின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் நான் அப்படி கூறவேயில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள தனுஷ், உடனடியாக மீடியாக்களுக்கு எஸ்எம்எஸ்-ம் அனுப்பியுள்ளார்.

அவர் கூறுகையில், எனது ட்விட்டரில் தலைவா படம் பற்றி கூறியிருந்த கருத்தின் ஒரு பகுதி மட்டும் ஒரு சில நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதனால் அது வேறு அர்த்தத்தை தருகிறது.

தமிழ‌க அரசுக்கு எதிரான கருத்துகளை நான் தெரிவிக்கவில்லை, நான் அரசுக்கு எதிரானவன் இல்லை.

ஒரு நடிகனாக, ரசிகனாக திரைப்படம் குறித்துதான் என்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment