விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆரம்பம் படத்தினை தொடர்ந்து தல அஜீத் 54 வது படத்திற்காக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவருகிறார்.
இதில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் விதார்த் நடிக்கிறார்.
சந்தானம், அபிநயா, அப்புக்குட்டி, பாலா, மயில்சாமி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.
தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருவதால் படத்திற்கு என்ன தலைப்பு வைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்டது.
இந்நிலையில் அஜீத்தின் இந்த 54வது படத்திற்கு 'விநாயகம் பிரதர்ஸ்' என தலைப்பிடப்பட்டதாக முதலில் கூறப்பட்டது ஆனால் தற்போது விநாயகம் பிரதர்ஸ் இல்லையெனவும் படத் தலைப்பு 'வீரம்' என வைக்கப்பட்டுள்ளதாக படத்தை தயாரிக்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
வ, வி என்ற எழுத்துக்களில் ஆரம்பித்த அஜீத் குமாரின் முந்தைய வெற்றி படங்களான வாலி, வில்லன், வரலாறு ஆகிய படங்களை தொடர்ந்து வரும் படம்தான் வீரம்.
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் 'வி' என்ற எழுத்தில் துவங்குவது நல்ல துவக்கமே, என்று தயாரிப்பாளர்களே கருத்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஏராளமான பொருட்செலவில் தயாராகி வரும் பொங்கல் அன்று திரைக்கு வருவது உறுதி என தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி குறிப்பு கூறுகிறது.
விஷ்ணுவர்த்தனின் 'ஆரம்பம்' படத்துக்கு தலைப்பு வைக்க ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக் கொண்டது போலில்லாமல், உடனடியாக அஜீத்தின் 54வது படத்துக்கு 'வீரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

0 comments:
Post a Comment