Tuesday, 4 June 2013

என்னை சினிமாவை விட்டு யாராலும் விரட்ட முடியாது ” : டைரக்டர் மணிவண்ணன் சவால்! [படங்கள்]


RAJ 2954இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக செல்போனில் ஒரு படத்தின் முழுப்பாடல்களையும் ரிலீஸ் செய்யும் வித்தியாசமான ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று சென்னையில் நடைபெற்றது.


க்ரைம் திரில்லர் படமாக தயாராகியிருக்கும் மறுமுகம் என்ற படமான அந்தப்படத்தில் ஹீரோவாக டேனியல் பாலாஜி, அனுப், ஆகியோர் நடிக்க அவர்களுடன் ப்ரீத்தி தாஸ், பானுசந்தர், சுவாமிநாதன், உமா பத்மநாபன் மற்றும்பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் பாடல்களை ஏக்நாத், ப்ரவீன் ஆகியோர் எழுதியிருக்கும் இந்தப்படத்தை 'ஊமை விழிகள்' ஆர்.அரவிந்த்ராஜ் உதவியாளர் கமல் சுப்பிரமணியம் இயக்கு டைரக்டராக அறிமுகமாகிறார்.
 Marumugam Audio Laiunch


இந்தப்படத்தின் முழுப்பாடல்களும் முதன் முறையாக செல்போனில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இலவசமாக கேட்கலாம்.

தயாரிப்பாளர் சங்க செயலாளர் பி.எல்.தேனப்பன் நடிகர் பரத், டைரக்டர்கள் மணிவண்ணன், கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர் ஆபாவாணன், டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், மனோஜ்குமார், நடிகர்கள் பானுசந்தர், 'ஐஸ்' அசோக், 'முருகா' அசோக், சஞ்சய், ப்ரவின் அனுப், நடிகைகள் ப்ரீத்தி தாஸ், லட்சுமி, உமா பத்மநாபன், இசை அமைப்பாளர் அகஸ்தியா, எடிட்டர் ஆர்.டி.அண்ணாதுரை என திரையுலகப்பட்டாளமே கலந்து கொண்ட இந்த விழாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு தனி மரியாதை ஏற்படுத்திக் கொடுத்த ஆபாவாணன் தலைமையிலான 'ஊமைவிழிகள்' படத்தின் டீமுக்கு விருது வழங்கி பாராட்டப்பட்டது.
விழாவில் டைரக்டரும், நடிகருமான மணிவண்ணன் கலந்து கொண்டு பேசியதாவது :

இப்போது இளைஞர்கள் நிறையபேர் சினிமாவுக்கு வருகிறார்கள். புதிதாக படங்கள் தருகிறார்கள் சந்தோஷமாக இருக்கிறது. காமெடி படங்கள் இப்போது ஒரு டிரண்டாக இருக்கிறது அது விரைவில் மாறிவிடும். காமெடி ஒரு சுவை. அதுவே சினிமாவாகி விட முடியாது. சினிமா வியாபாரம் விரிவடைந்திருக்கிறது.

எப்.எம்.எஸ். சேனல் ரைட்ஸ் என்று வருமான வழி கூடியிருக்கிறது. நான்கு பேர் சேர்ந்து படம் எடுத்தால் லாபம் சம்பாதிக்கலாம். நஷ்டம் அடைந்தாலும் பங்கு போட்டுக் கொள்ளலாம். இன்றைய இளைஞர்களோடு பணியாற்றுவேன். அவர்கள் வெற்றியிலும் பங்கு கொள்வேன். அதற்குள் சாகமாட்டேன். எந்த சந்து பொந்து வழியிலாவது சினிமாவில் நடித்துக் கொண்டே  இருப்பேன். எனக்கு வேறு தொழில் தெரியாது. வீட்டுக்கு முன்னால் பொட்டிக் கடை வைத்து கொடுத்தால்கூட லாஸ் பண்ணிடுவேன்.

என்னை சினிமாவை விட்டு விரட்ட முடியாது. இந்த கேட் வழியாக விரட்டினால் வேறு கேட் வழியாக வந்து விடுவேன். காரணம் இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. சினிமா என்பது கனவு வியாபாரம். நம் கனவும் ரசிகன் கனவும் ஒன்றாக அமைந்தால் படம் வெற்றி பெறும். மாறாக நாம் காணும் கனவை பார்த்து ரசிக்க வேண்டும் என்று ரசிகனை டார்ச்சர் பண்ணக்கூடாது.

இவ்வாறு மணிவண்ணன் பேசினார்.



0 comments:

Post a Comment