Wednesday, 29 May 2013

பிரபல நடிகை கைது! தப்பியோடிய காதலனுக்கு வலைவீச்சு ! என்ன நடந்தது ?

தேசிய விருது பெற்ற ரெட் சில்லீஸ் என்ற மலையாள படத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்தவர் நடிகை லீனா மரியா பால் (வயது 25). ‘ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா, கோப்ரா ஆகிய படங்களிலும் மற்றும் இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமுடன் மெட்ராஸ் கபே படத்திலும் இவர் நடித்து இருக்கிறார்.


கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த லீனா, பல் டாக்டருக்கு படித்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் படித்தார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை என்ஜினீயர் ஆவார்.

லீனாவின் ஆண் நண்பர் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகர். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டு லீனாவுடன் சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கி கிளை ஒன்றுக்கு சென்று இருக்கிறார். பெரிய திட்டம் ஒன்றை தொடங்குவதாக கூறி, அதற்காக அவர்கள் அந்த வங்கி கிளையில் ரூ.19 கோடி கடன் வாங்கி உள்ளனர்.

அதன்பிறகு அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக அந்த வங்கி கிளையின் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் கடந்த மார்ச் மாதம் சுகாஷ் சந்திரசேகர், லீனா ஆகிய இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 420 (ஏமாற்றுதல்), 120 பி (கிரிமினல் சதி), 406 (நம்பிக்கை மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்த டெல்லி போலீசாரின் உதவியுடன் டெல்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்த நடிகை லீனா மரியா பாலை கைது செய்தனர். மேலும் அவருடைய பாதுகாவலர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆவார்கள்.

ஆனால், போலீசார் வருவதை அறிந்ததும் சுகாஷ் சந்திரசேகர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அந்த பண்ணை வீட்டில் இருந்து 9 ஆடம்பர கார்கள், 81 விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். கைதான பாதுகாவலர்களிடம் இருந்த 4 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.

போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக லீனாவும், சுகாஷ் சந்திரசேகரும் கடந்த 12-ந் தேதி முதல் அந்த பண்ணை வீட்டில் பதுங்கி இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட நடிகை லீனாவை டெல்லி கோர்ட்டில் தனிப்படை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். விசாரணைக்காக, அவரை ரெயில் மூலம் போலீசார் வெள்ளிக்கிழமை சென்னை கொண்டு வருகிறார்கள்.

0 comments:

Post a Comment